• முகவரி : எண்: 27, ஏ.பி. ரோட், அரசு ஐடிஐ, திண்டுக்கல், தமிழ்நாடு 624 003
  • தொலைபேசி எண் : +91 94437 24701 | +91 97860 34291
  • +91 97860 34291

  • mrrnaturals@gmail.com

மரச்செக்கு தேங்காய் எண்ணையின் பயன்கள்

தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.

கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயை புரத சத்து காணப்படுகிறது. இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்கள் பலமடையும் பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு இதனால் முகமானது களை இழந்து காணப்படும் தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது தேங்காய் எண்ணையை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்

தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது

உடலுக்கு மட்டுமல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது இதனால் தோல்களில் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது அதிகமாக பெண்கள் இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணையை தடவிக் கொண்டு படுக்கலாம் இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்

கேரளா மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது வைக்கப்படுவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே ரகசியமாகவும்உள்ளது.